×

செட்டிநாடு நண்டு குழம்பு

எப்படி செய்வதுநண்டை சுத்தம் செய்து உப்பு போட்டு 15 நிமிடம் வேக
வைக்கவும். சின்ன வெங்காயத்தை உரிக்கவும். பூண்டை தோல் உரித்து தட்டி
வைக்கவும். ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை கொட்டி அதில் தேவையான அளவு
தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து குழைய வேக விடவும்.வெந்த
துவரம்பருப்பை நன்கு கடையவும். வாணலியில் சின்ன வெங்காயம், பீன்ஸ்,
துவரம்பருப்பு, தக்காளி, மிளகாய் தூள், தேங்காய், தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். காய்கறிகள்
வெந்ததும் நண்டை சேர்த்து லேசாக கொதிக்க விட்டு ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பெருஞ்சீரகம், பட்டை, சீரகம்,
வெந்தயம், பூண்டு போட்டு வதக்கி குழம்பில் சேர்க்கவும். கடைசியாக
கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும். சுவையான செட்டிநாடு நண்டு
குழம்பு ரெடி.

The post செட்டிநாடு நண்டு குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...