×

மனப்பதற்ற கோளாறு

நன்றி குங்குமம் டாக்டர்உளவியல்சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட பதற்றப்படுகிறவர்களும், அதிகம் கவலைப்படுகிறவர்களும் உண்டு. இது எதனால் ஏற்படுகிறது? சிகிச்சை என்னவென்று மனநல மருத்துவர் குறிஞ்சியிடம் கேட்டோம்…‘‘பெரிதாக கவலைப்படும்படி எந்தப் பிரச்னையும் இல்லாத போதும்கூட, சிறுசிறு விஷயங்களுக்காக பதற்றப்படுவதையும், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமோ என்று கற்பனை செய்து கவலைப்படுவதையும் பொதுவான மனப்பதற்ற கோளாறு (Generalized anxiety disorder) என்று சொல்கிறோம். இதயத் துடிப்பு அதிகமாக இருப்பது, அதிகமாக வியர்த்தல், படபடப்பு அல்லது நெஞ்சு வலிப்பது போன்று இருத்தல், இதுபோன்ற காரணங்களால் விரைவிலேயே சோர்வடைவது, தலைவலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் அனைத்தும் மனப்பதற்றத்தால் ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகளை உடைய நபர்கள் முதலில் அதிக சோர்வு, வயிற்றுவலி, நெஞ்சுவலி போன்ற காரணங்களுக்காக அதற்குரிய மருத்துவர்களிடம் சென்று பரிசோதனைகளும் சிகிச்சைகளும் செய்வார்கள். ஆனால், பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வரும். அதன் பிறகு அந்த மருத்துவர்கள் இது மனப்பதற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதி மனநல மருத்துவர்களிடம் பரிந்துரை செய்வார்கள். இதுபோன்ற நபர்கள் எங்களிடம் வருகையில், மனப்பதற்றத்தால் மேற்சொன்ன; பிரச்னைகள் எல்லாம் ஏற்படுமா என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். எங்களிடம் வந்த பிறகு மனப்பதற்றத்தால் உடல்ரீதியான மாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வார்கள். தலைவலி, காய்ச்சலுக்கு மருந்து எடுத்துக்கொண்டால் எப்படி சரியாகிறதோ அதேபோல, மனப்பதற்றத்துக்கும் உரிய; மருந்துகளோடு, சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதை சரி செய்யலாம். மூளையில் இருக்கிற Serotonin, Noradrenaline போன்ற; மின்கடத்திகளில் (Neurotransmitters) மாற்றங்கள் அல்லது குறைபாடு ஏற்படுகிறபோது மனப்பதற்றப் பிரச்னை உண்டாகிறது. இந்த மின்கடத்திகளின் குறைபாட்டினை சரி செய்வதற்குரிய மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி 3 மாதம் முதல் 1; வருடம் வரை எடுத்துக்கொள்வதன் மூலம் மனப்பதற்றத்தைக் குறைத்து சரிசெய்ய முடியும். இந்தப் பிரச்னை சாதாரண; நிலையில் இருந்தால் Cognitive behavioral therapy மூலம் சரி செய்யலாம். தீவிரமான நிலையில் இருந்தால் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலம் வரை எடுத்துக்கொள்வதன் மூலம் சரி செய்யலாம்.’’– க.கதிரவன்

The post மனப்பதற்ற கோளாறு appeared first on Dinakaran.

Tags : Dr.Kumkum ,Dinakaran ,
× RELATED ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!