×

4 மாத சம்பளம் பாக்கி நொய்டா மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்

நொய்டா: நொய்டா மருத்துவமனையில் 4 மாத சம்பள பாக்கியை கேட்டு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். நொய்டாவில் மாநில அரசு சார்பில் கொரோனா அர்பணிப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் பெர்பெக்ட் லவ்யா செக்யூரிட்டாஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 4 மாதமாக இந்த நிறுவனம் 50 துப்புரவு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. விசாரித்தபோது கொரோனா அர்ப்பணிப்பு மருத்துவமனையில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் வரை நிதி வழங்காமல் வைத்து இருப்பது தெரியவந்தது. மேலும் மாநில அரசிடம் இருந்து சுகாதாரத்துறைக்கு போதுமான நிதியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் நேற்று மருத்துவமனைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் போராட்டம் நடத்திய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். …

The post 4 மாத சம்பளம் பாக்கி நொய்டா மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Baki Noida Hospital ,Noida ,Noida Hospital ,Paki Noida Hospital ,Dinakaran ,
× RELATED டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட...