
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘டிமான்ட்டி காலனி’ என்ற படத்தின் 3வது பாகமான ‘டிமான்ட்டி காலனி 3: தி எண்ட் இஸ் டூ ஃபார்’ என்ற படம், கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இதற்கு முன்பு 2 பாகங்களும் வெற்றிபெற்றிருந்த நிலையில், 3வது பாகத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வர்த்தக வட்டாரத்தில் இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய இதை ஃபைவ் ஸ்டார் கே.செந்தில் தமிழகம் முழுவதும் திரையிடும் உரிமையை வாங்கியுள்ளார்.
இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம்.குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

