×

மகளுக்கு பெயர் சூட்டிய ஹரீஷ் கல்யாண்

தமிழ் படவுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர், ஹரீஷ் கல்யாண். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `பார்க்கிங்’, `லப்பர் பந்து’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடந்த 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்த ஹரீஷ் கல்யாண், கடந்த மார்ச் 2ம் தேதி ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். அப்போது அவர், ‘எனது அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் அற்புதமான செய்தியை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று குறிப்பிட்டு, தனக்கு மகள் பிறந்த செய்தியை அறிவித்தார்.

நேற்று தமிழ் புத்தாண்டு நன்னாளில், தனது மகளுக்கு ‘கிரியா ஹரீஷ்’ என்று பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்தார். தங்கள் குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஹரீஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் தம்பதி சோஷியல் மீடியாவில் வெளியிட்டனர். இதையடுத்து அவர்களுக்கும், கிரியா ஹரீஷுக்கும் ரசிகர்களும், நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Harish Kalyan ,Narmada Udayakumar ,
× RELATED எல்லாவித கேரக்டரிலும் நடிக்க ஆசை: மாஸ்டர் பினு ஜான் போஸ்கோ