- கோபி நயினார்
- சென்னை
- அராம்
- டாக்டர்
- ஆர். நாகராஜன்
- அதிதி திரைப்படங்கள்
- ராதிகா
- வெற்றிமாறன்
- விஜய் சேதுபதி
- சிம்மம்
- அஞ்சலி நாயர்
- எம். எஸ் பாஸ்கர்
- சேதன்
சென்னை: அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் ஆர்.நாகராஜன் வழங்க, அறம் பட டைரக்டர் கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள ‘காலனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றிமாறன், விஜய் சேதுபதி வெளியிட்டனர். தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. ராதிகாவின் மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார்.
இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறு இடைவெளிக்குப் பிறகு, தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ். படத்தொகுப்பு – ஆண்டனி.
