×

பப்ளிசிட்டிக்கு அலையும் பூனம் பாண்டே

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய ஹீரோயின் என்று அழைக்கப்படும் பூனம் பாண்டே, ‘இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றால், நிர்வாணமாக உலா வருவேன்’ என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். சமீபத்தில், தான் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு போட்டோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். பிறகு அவர், ஏப்ரல் 1ம் தேதி என்பதால், அனைவரையும் முட்டாளாக்க செய்த முயற்சி என்று சொல்லி, அனைவரையும் கோபப்பட வைத்தார்.

இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள், அவரை கண்டபடி விமர்சித்தனர். இந்நிலையில், தனது செயலை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ‘சரியோ… தவறோ… நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும். அப்படி பேச வைக்கும் வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும். திரையுலகில் நமது அடையாளம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே கவனிக்கப்படுவோம். மாறாக. நம்மை பற்றிய தகவல் வெளியாகாத பட்சத்தில், நம்மை மறக்க நாமே காரணமாக இருந்துவிடுவோம்’ என்று சொன்ன கருத்து பரபரப்பு ஏற்படுத்தி, ‘ஏன் இப்படி பப்ளிசிட்டிக்கு அலைந்து, அனைவரையும் டென்ஷனாக்குகிறீர்கள்?’ என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

Tags : Poonam Pandey ,Bollywood ,World Cup ,
× RELATED மஞ்சு வாரியர் படத்துக்கு யு/ஏ