×

சம்பளத்தை எதிர்பார்க்காத மிருணாள் தாகூர்

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘டகாய்ட்: தி லவ் ஸ்டோரி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் ‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தென்னிந்திய படவுலகில் பிரபலமான மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘முன்னணி இயக்குனர்கள் என்னை தொடர்புகொண்டு பேசும்போது, அவர்கள் கொடுக்கும் ஆஃபர்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், சில படங்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாலும், கனத்த இதயத்துடன் அதை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் கதாபாத்திரங்கள் எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத மைல் கற்கள். ‘பேராசை பெருநஷ்டம்’ என்று சொல்வார்கள். அதனால், வாய்ப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், எனக்கு ஏற்ற சரியான படத்தை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். சம்பளத்தை பற்றி கவலைப்படுவது இல்லை’ என்றார். இதையறிந்த ரசிகர்கள், அவரது செயலை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

Tags : Mrunal Tagore ,
× RELATED மஞ்சு வாரியர் படத்துக்கு யு/ஏ