×

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திரிஷா

சமீபத்தில் கோயிலுக்கு சென்ற திரிஷா அங்கு செல்பி எடுத்து அதை அவரது சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். அவரது செல்லப் பிராணியான இஸ்ஸி என்ற நாயை தன்னுடன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘அவளின் முதல் கோயில் விசிட் இது’ என திரிஷா பதிவிட்டுள்ளார்.

இதனால், நாயை கோயிலுக்குள் திரிஷா அழைத்து சென்றாரா? அதற்கு யார் அனுமதி கொடுத்தது? என நெட்டிசன்கள் பல கேள்விகளை கேட்டு அவரை சோஷியல் மீடியாவில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் நாயை கோயிலுக்கு அழைத்து செல்வதில் என்ன தவறு என்று திரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை தற்போது சூர்யா உடன் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷா, அடுத்ததாக சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மோகன்லாலுடன் ‘ராம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags : Trisha ,
× RELATED தேர்தல் பின்னணியில் படம் எடுத்தது ஏன்? உமாபதி ராமய்யா விளக்கம்