×

சம்பளத்தை திடீரென குறைத்த நயன்தாரா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’, டியூட் விக்கி இயக்கத்தில் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் ஜோடியாக ‘ஹாய்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் நுழைந்தார் நயன்தாரா. அப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சமீபத்தில் நயன்தாராவின் 2வது இந்தி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். சல்மான் கானின் முந்தைய சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் இந்த படத்திற்கு அவர் சம்பளமே வாங்காமல் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் சல்மான் கான் படம் என்பதால் சம்பளத்தை சற்று குறைத்து 10 கோடி ரூபாய் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

Tags : Nayanthara ,South India ,RJ Balaji ,Vicky ,Vishnu Edavan ,Kavin ,Shah Rukh Khan ,Atlee ,
× RELATED காளிதாஸ் 2 விமர்சனம்…