×

அமைதி குணம் கொண்ட கவுசல்யா

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் தற்போது ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘ட்ரிப்’, ‘தூக்குதுரை’ ஆகிய படங்களின் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் குஷி ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கவுசல்யா, கவுசி ரவி, மைம் கோபி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.கே.பிரியன் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய செல்வராகவன், ‘‘இது உணர்ச்சிப்பூர்வமான படம்.

இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அசுரத்தனமாக உழைத்தனர். அவர்கள் எப்போது தூங்குவார்கள், சாப்பிடுவார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியாது. அவர்களை பார்த்து இப்படியும் படம் எடுக்கலாம் என்று நான் கற்று கொண்டேன். கவுசல்யாவின் தீவிர ரசிகன் நான். ஒரு காலத்தில் அவரை நானே ரசித்து இருக்கிறேன். இதுபோன்ற நிகழ்ச்சியில் அவர் அருகிலேயே அமர்வது கூட எனக்கு சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது. கவுசல்யா அமைதியான குணாதிசயம் கொண்டவர் என்றால், மற்றொரு ஹீரோயினான குஷி ரவி ஆரவாரம் செய்யக் கூடியவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்கு இருந்தாலும் அவரது சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும்’’ என்று கலகலப்பாக பேசினார்.

Tags : Kaushalya ,Selvaraghavan ,Dennis Manjunath ,Khushi Ravi ,Y.G. Mahendran ,Kaushy Ravi ,Mime Gopi ,A.K. ,Priyan ,
× RELATED காளிதாஸ் 2 விமர்சனம்…