- கென் கருணாஸ்
- கென் கருணாஸ்
- சூரஜ் வெஞ்ஜராமூடு
- தேவதர்ஷினி
- சிராய்
- அனிஷ்மா அனில் குமார்
- மீனாட்சி தினேஷ்
- பிரியான்ஷி யாதவ்
- ஜி. விபிரகாஷ் குமார்
கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்த ‘யூத்’ என்ற படம், கடந்த 19ம் தேதி திரைக்கு வந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக வரவேற்பு பெற்ற இப்படம், 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் கென் கருணாஸ் தந்தையாக சூரஜ் வெஞ்சரமூடு, தாயாக தேவதர்ஷினி, கதையின் நாயகிகளாக ‘சிறை’ அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை. படத்தை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தி, சிம்பு உள்பட பலர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

