×

302 ரன் குவித்து பாகிஸ்தான் டிக்ளேர்

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியின்  முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது. 2வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தானது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் பாக்.  9 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவாத் ஆலம்  124* ரன் விளாசினார்.வெ.இண்டீஸ்  தரப்பில்  ரோச்,  சீல்ஸ் தலா 3, ஹோல்டர் 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய வெ.இண்டீஸ் 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் எடுத்து திணறி வருகிறது. …

The post 302 ரன் குவித்து பாகிஸ்தான் டிக்ளேர் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kingston ,West Indies ,Dinakaran ,
× RELATED பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை...