×

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? சூப்பர் 8 சுற்றில் இன்றிரவு மோதல்

செயின்ட் லூசியா: ஐசிசி டி.20உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 பிரிவில் இன்று இரவு 8 மணிக்கு செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெறும் முக்கியமான போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதுகின்றன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், 2வது போட்டியில் வங்கதேசத்தை வென்ற இந்தியா 4 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் 2.425ஆக இருப்பதால் இன்று படுதோல்வியை சந்திக்காமல் இருந்தாலே அரையிறுதிக்கு தகுதிபெறலாம். இந்திய அணியில் இன்று எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை. மறுபுறம் ஆஸ்திரேலியா முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் இன்று வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மைதானம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் ஆஷ்டன் அகர் ,இன்று தனது இடத்தை தக்க வைக்கலாம்.

இதனால் ஸ்டார்க்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் 0.223 ஆக இருக்கும் நிலையில் இன்று இந்தியாவை வீழ்த்தினால் சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழையலாம். ஒரு வேளை ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து, நாளை காலை கடைசிபோட்டியில் வங்கதேசத்தை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்று இந்தியாவை ஆஸ்திரேலியா வென்று நாளை ஆப்கானிஸ்தானும் வென்றால் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும் இந்த நிலை ஏற்பட்டால் ரன்ரேட்டில் முதல் 2 அணி அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.

இந்தியா இன்று ஆஸி.யை படுதோல்வி அடைய செய்து, ஆப்கானிஸ்தான் நாளை அதிக ரன் வித்தியாசத்தில் வென்றால் இந்தியாவும், ஆப்கனும் அரையிறுதிக்குள் நுழையலாம். ஒருவேளை ஆஸ்திரேலியா இன்று இந்தியாவை 41ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் முதல் இடத்திற்கு முன்னேறும். அதே நேரம் ஆப்கானிஸ்தான் 83 ரன் வித்தியாசத்தில் வென்றால் இந்தியா 3வது இடத்திற்கு சரிந்து வெளியேறும் அபாயமும் உள்ளது. இதற்கு இந்தியா வாய்ப்பு கொடுக்காமல் உலக டெஸ்ட சாம்பியன் ஷிப், உலக கோப்பை 50 ஓவர் பைனலில் அடைந்த தோல்விகளுக்கு இந்தியா இன்று பழிதீர்த்து ஆஸி.யை வெளியேற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வங்கதேசத்திற்கும் சிறிய வாய்ப்பு உள்ளது. இந்தியா 55 ரன் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்று, நாளை வங்கதேசம் 31 ரன் வித்தியாசத்தில் ஆப்கனை வென்றால் அந்த அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.

The post ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? சூப்பர் 8 சுற்றில் இன்றிரவு மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,Australia ,Super 8 round ,St. Lucia ,ICC T20 World Cup cricket ,Afghanistan ,Super 8 ,Dinakaran ,
× RELATED 8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை...