×

மேற்கு வங்கத்தில் ரூ.10 கோடி முறைகேடு பாஜ தலைவர் கைது: திரிணாமுல்லில் இருந்து தாவியவர்

பங்குரா: மேற்கு வங்க பாஜ.வை சேர்ந்த ஷ்யாம பிரசாத் முகர்ஜி, நிதி மோசடி வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தில் உள்ள பிஸ்னுபூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் உறுப்பினராகவும், திரிணாமுல் கட்சியில் அமைச்சராகவும் வலம் வந்தவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. இவர் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜ.வில் இணைந்து மம்தா பானர்ஜிக்கு எதிராக செயல்பட்டார். இத்தேர்தலில் மம்தா 3ம் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைந்த பிறகு, 2020ம் ஆண்டில் இணைய வழி குத்தகையில் ரூ.10 கோடி மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முகர்ஜியிடம் நேற்று விசாரணை நடத்த சென்ற போலீசார், திடீரென அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இது முற்றிலும் பழி வாங்கும் நடவடிக்கை என்று மேற்கு வங்க பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. …

The post மேற்கு வங்கத்தில் ரூ.10 கோடி முறைகேடு பாஜ தலைவர் கைது: திரிணாமுல்லில் இருந்து தாவியவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,West Bengal ,Bankura ,Shyama Prasad Mukherjee ,West… ,Trinamool ,Dinakaran ,
× RELATED பழைய தொகுதியை மாற்றியதால் மேற்கு வங்க பாஜவில் அதிருப்தி