×

இரண்டாவது குழந்தைக்கு தாயான பூர்ணா

கேரளாவிலுள்ள கண்ணூரை சேர்ந்த பூர்ணா என்கிற ஷாம்னா காசிம், கடந்த 2022ம் ஆண்டு ஷானித் ஆசிப் அலி என்ற துபாய் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, துபாயில் செட்டிலாகி நடனப்பள்ளி நடத்தி வருகிறார். அவருக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்த பூர்ணா, இரண்டாவது முறையாக கர்ப்பமான நிலையில், வெகுவிமரிசையாக வளைகாப்பு நடத்தப்பட்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார்.

இந்நிலையில், பூர்ணாவின் கணவர் ஷானித் ஆசிப் அலி வெளியிட்டுள்ள பதிவில், ‘அல்லாஹ்வின் அருளால், எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவள் அல்லாஹ்வின் விலைமதிப்பற்ற பரிசு. எங்கள் ஹம்து குட்டியின் அன்பான சகோதரி. இது எங்கள் குடும்பத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம். சுகப்பிரசவம்தான் நடந்துள்ளது’ என்று குறிப்பிட்டு, டாக்டர் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து பூர்ணாவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த அன்ேற தனது பெண் குழந்தைக்கு ‘துவா ஜமீலா’ என்று பூர்ணா பெயர் சூட்டியுள்ளார்.

Tags : Poorna ,Shamna Kasim ,Kannur, Kerala ,Dubai ,Shanit Asif Ali ,
× RELATED உடல் எடையை குறைத்த தமன்னா