மும்பை: கடந்த 1999ல் மும்பை சவுபாத்தி பகுதியில், நள்ளிரவில் பலத்த மழை பெய்தபோது, ஒரு விருந்தில் பங்கேற்ற அனு அகர்வால் (57), காரில் வீடு திரும்பியபோது விபத்துக்குள்ளாகி, 29 நாட்கள் கோமா நிலையில் உயிருக்கு போராடினார். பிறகு கோமாவில் இருந்து மீண்டு வந்த அனு அகர்வாலுக்கு பழைய நினைவு கள் எல்லாம் மறந்து போனது. இந்நிலையில், திடீரென்று பழைய சம்பவங்கள் குறித்து அனு அகர்வால் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘எனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றியே பேசினார்கள். அந்த விபத்தால் எனது ஒட்டுமொத்த உடல் நிலைகுலைந்தது.
எனது மனநலமும், உடல் ஒருங்கிணைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது. யோகா, ஒழுக்கம், விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கை முறை, இயற்கை யின் சுழற்சி ஆகியவையே எனது உடல்நிலை தேற முக்கிய காரணமாக இருந்தது’ என்றார். தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யோகா நிபுணராக மாறியுள்ள அவர், ஏழை குழந்தைகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கிறார். கடந்த 1993ல் மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ என்ற படத்தில், ‘கொஞ்சம் நிலவு’ என்ற பாடல் காட்சியில் அனு அகர்வால் நடனம் ஆடியது குறிப்பிடத் தக்கது.

