×

பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

கிங்ஸ்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் 2 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில்  முதல் டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 217 ரன், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னில் ஆட்டமிழந்தன. 36 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்தது.பாபர் 54, அஷ்ரப் 12 ரன்னுடன் 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அஷ்ரப் 20, பாபர் 55 ரன்னில் பெவிலியன் திரும்பினர். யாசிர் ஷா 4, அப்ரிடி 0, ஹசன் அலி 28 ரன் எடுக்க, பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது. அப்பாஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 5, கெமார் ரோச் 3, மேயர்ஸ், ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெ.இண்டீஸ் களமிறங்கியது. ஆனால், பாக் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெ.இண்டீஸ் வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாகீன் அப்ரிடி வேகத்தில் பிராத்வெய்ட் 2, பாவெல் 4, போன்னர் 5 ரன்னில் அணிவகுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த பிளாக்வுட் 55, ரோஸ்டன் சேஸ் 22 ரன் எடுக்க, மேயர்ஸ் 0, ஹோல்டர் 16, சில்வா 13 ரன்னில் வெளியேறினர். வாரிகன் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழந்ததால், வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு சீல்ஸ் கம்பெனி கொடுக்க, பொறுப்புடன் விளையாடிய ரோச் வெற்றியை வசப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் 56.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரோச் 30 ரன், சீல்ஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். தரப்பில் ஷாகீன் 4, அப்பாஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய ஜேடன் சீல்ஸ்  ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெ.இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி  டெஸ்ட் ஆக. 20ம் தேதி  கிங்ஸ்டனில் தொடங்குகிறது….

The post பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : West Indies ,Pakistan ,Kingston ,West… ,Dinakaran ,
× RELATED பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை...