- பிரியங்கா
- கொரியா
- பிரியங்கா மோகன்
- ஸ்ரீனிதி சாகர்
- ரைஸ் ஈஸ்ட் என்டர்ட
- ரா. பிரியங்கா மோகன்
- கார்த்திக்
- நெட்ஃபிக்ஸ்

பிரியங்கா மோகன் மற்றும் ’மேட் இன் கொரியா’ குழுவினர், கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை கலகலப்பாக விளையாடினர். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ‘நித்தம் ஒரு வானம்’ ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட பிரியங்கா மோகன், இப்படம் வரும் 12ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது என்று சொன்னார்.
மேலும் அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு கொரியன் டிராமாக்களை பார்த்து, சில ெகாரியன் வார்த்தைகளை கற்றுக்கொண்டேன். பிறகு இயக்குனர் கொடுத்த இன்புட்ஸூம் எனக்கு உதவியாக இருந்தது. ஒன்றரை மாதங்கள் கொரியாவில் படப்பிடிப்பு நடந்தது. கணிக்க முடியாத காலநிலைதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு காலையில் படப்பிடிப்புக்கு செண்பாவாக சென்று, மாலையில் அதே செண்பாவாக ஓட்டலுக்கு திரும்புவேன். நாங்கள் கொரிய வார்த்தைகள் கற்றுக்கொண்டது போல், ‘தளபதி’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ‘சுந்தரி…
கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலையும், நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்கு இருந்தவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம். இயக்குனரின் மனைவி, கொரியன் டிராமாவின் தீவிர ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. தன்னை யார் என்று செண்பா கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’ படம். கொரியாவில் படமான முதல் தமிழ் படமான இது, 13 மொழிகளில் டப்பிங் ஆகிறது. 36 மொழிகளில் சப்-டைட்டில் இடம்பெறுகிறது’ என்றார்.

