×

எஸ்.பி.பி குரலில் வாணி ஜெயராம் பாடல்கள்

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் 3ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ‘விஸ்வராகம்’ இரண்டாம் பாகத்தின் இசைத்தொகுப்பு அவருக்கு நினைவஞ்சலியாக சமர்ப்பிக்கப்படுகிறது. இதை சுமதி ராம் எழுதி தயாரித்துள்ளார். வாணி ஜெயராம் பாடியிருந்த பாடல்கள், மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் முன்னதாகவே ஒலிப்பதிவு ெசய்யப்பட்டுள்ளது. அப்பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இந்த முழு இசை அனுபவமும் மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் கைதேர்ந்த இசை அமைப்பின் மூலம் நடந்துள்ளது.

ஹைக்கூ பாணியில் அமைந்திருக்கும் இசை வடிவமான ‘விஸ்வராகம்’ இரண்டாம் பாகம், தற்போது யூடியூப், ஸ்பாட்டிஃபை, டீசெர் ஆகிய தளங்களில் கிடைக்கிறது. இத்தொகுப்பில் வாணி ஜெயராமின் ஆன்மாவை தொடும் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பது, இசைக்கு மேலும் ஆழத்தையும், நிறைவையும் சேர்த்துள்ளது.

Tags : S. B. Vani Jayaram ,Vani Jayaram ,Sumati Ram ,S. B. Balasubramaniam ,Balasubramaniam ,M. S. Viswanathan ,HIKOO ,YOUTUBE ,
× RELATED உடல் எடையை குறைத்த தமன்னா