×

இரண்டாவது இன்னிங்சில் போராடுகிறது பாகிஸ்தான்

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் சவாலான இலக்கை நிர்ணயிக்க போராடுகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  பாகிஸ்தான் அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடியது. டி20 தொடரின் 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், எஞ்சிய ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெ.இண்டீஸ் முதலில் பந்துவீச, பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (70.3 ஓவர்). அதிகபட்சமாக  பவாத் ஆலம் 56 ரன் எடுத்தார். பாகீம் அஷ்ரப் 44, கேப்டன் பாபர் ஆஸம் 30 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர், ஜேடன்  சீல்ஸ் ஆகியோர் தலா 3,  கெமர் ரோச் 2, கைல் மேயர்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெ.இண்டீஸ் அணி கேப்டன் கிரெய்க் பிராத்வெய்ட் – ஜேசன் ஹோல்டர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் 253 ரன் குவித்து ஆட்டமிழந்தது. பிராத்வெய்ட் 97 ரன், ஹோல்டர் 58 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 4, அப்பாஸ் 3, பாகீம் அஷ்ரப், ஹசன் அலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 36 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்திருந்தது. அபித் அலி 34, அசார் அலி 23, முகமது ரிஸ்வான் 30 ரன் எடுக்க, இம்ரான் பட், பவாத் ஆலம் டக் அவுட்டாகினர். கேப்டன் பாபர் ஆஸம் 54 ரன், பாஹீம் அஷ்ரப் 12 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச், சீல்ஸ் தலா 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க 124 ரன் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க போராடுகிறது. …

The post இரண்டாவது இன்னிங்சில் போராடுகிறது பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kingston ,West Indies ,Dinakaran ,
× RELATED பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை...