தமிழில் ‘தி லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்தவர், இந்தியாவின் முன்னணி மாடல் அழகியும், நடிகையுமான ஊர்வசி ரவுடேலா. பல்வேறு மொழிப் படங்களில் நடித்து பல ேகாடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர், தினமும் ேசாஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களும் மற்றும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது 32வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அவர், மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள பாகேஷ்வர் தாம் என்ற பகுதியில் நடந்த 251 ஏழை பெண்களின் திருமணத்துக்கு தேவையான நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்றாலும், பொருளாதார ரீதியாக அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். இதுகுறித்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள், ஊர்வசி ரவுடேலாவை மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.
