- சென்னை
- ராம் மணிகண்டன்
- ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட்
- ஏ. அகஸ்டின் பிரபு
- ஹாலிவுட்
- ராமேஸ்வரம்
- தூத்துக்குடி
- கார்த்திக் செல்வம்
- ஆதர்ஷ் சந்திரசேகரன்
- அமல் டாமி
- காளி அரங்கம்
- அஜித் விக்னேஷ்
- அசோக் குமார்
- ஷாம்
- நிர்மல்
- அமர் ரமேஷ்
சென்னை: ராக்ஸ் நேச்சர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ராம் மணிகண்டன் தயாரித்துள்ள படம், ‘மகரம்’. மான்ஸ்டர் ஜானரில், முழுமையான சயின்ஸ்பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இதை ஏ.அகஸ்டின் பிரபு எழுதி இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 70 சதவீத காட்சிகள் ராமேஸ்வரம், தூத்துக்குடி கடற்பகுதிகளில் படமாக்கப்பட்டன. கார்த்திக் செல்வம் எடிட்டிங் செய்ய, ஆதர்ஷ் சந்திரசேகரன் இசை அமைத்துள்ளார். அமல் டோமி ஒளிப்பதிவு செய்ய, காளி அரங்கம் அமைத்துள்ளார். புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், அசோக் குமார், ஷாம், நிர்மல், அமர் ரமேஷ் நடித்துள்ளனர்.
ஹீரோயின் இஷிதா கூறுகையில், ‘நாவிஸ் என்ற ஆர்கியாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளேன். மொழி வேறுபாடு இருந்தாலும் என்னை அன்புடன் ஏற்றுக்கொண்டனர். 80 சதவீத காட்சிகளில் மேக்கப் இல்லாமல் நடித்தேன். டீசரில் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று தெரியும். நடுக்கடலில் உயிரை பணயம் வைத்து நடித்தோம்’ என்றார். ஏ.அகஸ்டின் பிரபு கூறும்போது, ‘தமிழில் ஒரு மான்ஸ்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை உருவாக்கினோம். ரசிகர்களின் ஆதரவால் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் கண்டிப்பாக வெற்றிபெறும். 700 விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விரைவில் திரைக்கு வருகிறது’ என்றார்.
