×

விஜய்யை நினைத்து நெகிழ்ந்த ராஷ்மிகா

கடந்த 26ம் தேதி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா காதல் திருமணம் நடந்தது. வரும் மார்ச் 4ம் தேதி மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடக்கிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள ஒரு பதிவு மனதை நெகிழ வைத்துள்ளது. அதில் அவர், ‘உண்மையான அன்பு என்ன என்பதை எனக்கு காட்டியவர், விஜய் தேவரகொண்டா. மிகப்பெரிய கனவுகளை காண்பதில் தவறில்லை என்று தினமும் என்னிடம் சொல்வார். நான் நினைத்து பார்ப்பதை விடவும், என்னால் இன்னும் உயரிய சாதனைகளை செய்ய முடியும் என்று தொடர்ந்து எனக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். உண்மையான நண்பர்களுடன் பயணம் செய்வதுதான், உலகின் மிகச்சிறந்த விஷயம் என்பதை எனக்கு அவர் புரிய வைத்தார்.

அவரை பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். இன்று நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அப்பெண்ணாக நான் மாறியதற்கு முழுமையான காரணம் அவர்தான். உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். விஜய் தேவரகொண்டா மீது நான் வைத்திருக்கும் காதலை விவரிக்க வார்த்தைகள் போதாது. எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை போன்ற அனைத்துக்கும் இன்று ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது. அனைத்துக்கும் சாட்சியாக, ஒரு மிகப்பெரிய அங்கமாக விஜய் தேவரகொண்டா என்னுடன் இருக்கிறார். இப்போது நான் அவரது காதல் மனைவி. அப்படி நான் அழைக்கப்படுவதை கேட்டு மிகவும் பெருமைப்படுகிறேன். இனி எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் மட்டுமே நிரம்பியிருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Rashmika ,Vijay ,Vijay Deverakonda ,Rashmika Mandanna ,Hyderabad ,
× RELATED ரூ.16 கோடிக்கு கேக் வெட்டிய ஊர்வசி ரவுட்டேலா