×

மூன்றாவது முறை இணைந்த பிந்து மாதவி

கடந்த 2012ல் கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம், ‘கழுகு’. சத்யசிவா இயக்கிய இதில், கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். அதற்கு பிறகு 2019ல் வெளியான ‘கழுகு 2’ படத்திலும் கிருஷ்ணா ஜோடியாக பிந்து மாதவி நடித்தார். தற்போது கிருஷ்ணா நடிப்பில் அவரது 25வது படம் திரில்லர் கதையுடன் உருவாகி இருக்கிறது.

பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இதில், கிருஷ்ணா ஜோடியாக மீண்டும் பிந்து மாதவி நடித்துள்ளார். கேரளாவிலும், குற்றாலத்திலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்ேபாது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

Tags : Bindu Madhavi ,Krishna ,Kazhugu ,Sathyasiva ,Balakrishnan ,Kerala ,Courtallam ,
× RELATED உடல் எடையை குறைத்த தமன்னா