×

நண்பர்களுடன் விளையாடிய சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

அண்ணாநகர்: சென்னை ஐ.சி.எப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(35). ஆட்டோ டிரைவர். இவரது மகள் கிருபா(13). மகன் ரித்தீஸ்(10). கிருபா அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள். ரித்தீஸ் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று மதியம் ரித்தீஸ் வீட்டு வாசல் அருகே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்னர் வீட்டிற்கு வந்து டிவி பார்த்தான். அப்போது, கிருபாவிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி சென்றான். வெகுநேரமாகியும் அவன் வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் லுங்கியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது….

The post நண்பர்களுடன் விளையாடிய சிறுவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Satish ,Chennai ICF Ambedkar Nagar ,Krupa ,Rithees ,
× RELATED அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை;...