×

ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமா? 25 ஆண்டுக்கு பிறகு சேது அபிதா திடீர் விளக்கம்

 

சென்னை: ‘சேது’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அபிதா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். திடீரென சினிமாவை விட்டு விலகினார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் துவக்க விழாவிலும் அவர் கலந்துகொண்டார். இதையடுத்து அவரை பல்வேறு யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தன.

ராமராஜன், நளினி தம்பதி கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்றுதான், ராமராஜன், அபிதா காதல். இருவரும் காதலிப்பதாலேயே நளினியை ராமராஜன் பிரிந்துவிட்டார் என்றும் பேசப்பட்டது. அப்போது இது பற்றி எதுவும் பேசாத அபிதா, 25 ஆண்டுகள் கழித்து இப்போது பேசியிருக்கிறார். அவர் கூறியது: அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன்.

ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பினார்கள். அது உண்மையென்றால் அப்போதே நடந்திருக்க வேண்டுமே. அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், அது பொய்யான தகவல். எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அதனால்தான் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு வந்தேன். இவ்வாறு அபிதா கூறினார்.

Tags : Ramarajan ,Nalini ,Setu ,Chennai ,Abita ,Vikram ,YouTube ,
× RELATED நடிகர்கள் ரீல்ஸ், ஷார்ட்ஸில் கூட நடிக்கலாம்: சொல்கிறார் சரத்குமார்