மமிதா பைஜு நடித்த ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. தற்போது மிகவும் பிசியாக இருக்கிறார். விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, ‘சூர்யா 46’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமலு’ என்ற படத்தின் இயக்குனர் கிரீஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது.
அப்போது ‘எல்லா புகழும்’ என்ற பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் மமிதா பைஜு பாடியிருந்தார். பிறகு அந்த வீடியோ வைரலாகி, பல்வேறு தரப்பினரால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான ‘வித் லவ்’ என்ற படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த மமிதா பைஜுவிடம் நிருபர்கள் சிலர் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, தன்னை பற்றிய ட்ரோல்கள் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொதுமக்களும், ரசிகர்களும் இதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்த்து வருகின்றனர். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது ஒரு நல்ல ஃபன்’ என்றார்.
