×

ட்ரோல்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு: மமிதா பைஜு

 

சென்னை: மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பிரேமலு’, ‘ரெபல்’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது அவர் மிகவும் பிசியான நடிகையாக மாறியிருக்கிறார். விஜய்யுடன் ‘ஜன நாயகன்’, தனுஷுடன் ‘கர’, ‘சூர்யா 46’, விஷ்ணு விஷாலுடன் ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அவர், மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘பிரேமலு’ படத்தின் டைரக்டர் கிரீஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்தலேகம் குடும்ப யூனிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தபோது, ‘எல்லா புகழும்’ என்ற பாடலிலுள்ள சில வரிகளை மேடையில் மமிதா பைஜு பாடினார். பிறகு அந்த வீடியோ வைரலாகி, பல்வேறு தரப்பினரால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான ‘வித் லவ்’ என்ற படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த மமிதா பைஜுவிடம் நிருபர்கள் சில கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, தன்னை பற்றிய ட்ரோல்கள் குறித்து கூறுகையில், ‘பொதுமக்களும், ரசிகர்களும் இதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கின்றனர். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது ஒரு நல்ல ஃபன்’ என்றார்.

Tags : Mamita Baiju ,Chennai ,Vijay ,Dhanush ,Vishnu Vishal ,Girish A.D. ,Nivin Pauly ,
× RELATED இருண்ட உலகில் சன்னி லியோன்