- ஜனனி
- ராமகிருஷ்ணன் ஆறுமுகம்
- ARK புரொடக்ஷன்ஸ்
- வினோத் பெருமாள்
- ஈகோப்மின் மோஷன் பிக்சர்ஸ்
- பிரஜின்
- புகழ்
- லியோ' ஜனனி
- விக்ரம் விஜய்
- Ravimaria
- மைம் கோபி
- தீபா
- அபிதா
- ஸ்ரீகாந்த் தேவா
- ராஜா பட்டாச்சார்ஜி
- மணிகண்டன்
- செந்தமிழ் செல்வன்
முழுநீள காமெடி படமாக ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்ற படம் உருவாகிறது. ஏஆர்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம், எகோப்மின் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வினோத் பெருமாள் தயாரிக்கின்றனர். பிரஜின், புகழ் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ‘லியோ’ ஜனனி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடங்களில் விக்ரம் விஜய், ரவிமரியா, மைம் கோபி, தீபா, அபிதா நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். மணிகண்டன் அரங்கம் அமைக்க, செந்தமிழ் செல்வன் எடிட்டிங் செய்கிறார். மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளிக்க, சஞ்ஜெய் இணை தயாரிப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘ஒரே வீட்டில் இரண்டு ஊதாரிகள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து, சுவாரஸ்யமான காட்சிகளுடன் படத்தை இயக்குகிறேன். இம்மாத இறுதியில் தேனியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கோடை விடுமுறையில் படம் ரிலீசாகிறது’ என்றார்.
