×

இன்ஸ்டாவில் மாதம் ரூ.7 லட்சம் சம்பாதிக்கும் நேகா சர்மா

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான நேகா சர்மா (38), சமீபகாலமாக நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றிபெறாத நிலையில், திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது, தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி தளங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தனது வருமானத்துக்காக புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். அதன்படி அவரது வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.1 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். இதை பயன்படுத்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஸ்பெஷல் படங்கள்’ என்ற சந்தா முறையை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். நேகா சர்மாவின் தனிப்பட்ட மற்றும் பிரத்தியேக போட்டோக்கள், வீடியோக்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் மாதம் 290 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தற்போது வரை சுமார் 2,400 ரசிகர்கள் இத்திட்டத்தில் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மட்டும் அவர் மாதந்தோறும் 7 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுகிறார். ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் சம்பாதிக்கும் வருமானத்தை விட, ஒரு நடிகை தனது செல்போன் மூலம் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை சம்பாதித்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து திரையுலக வட்டாரங்கள் கூறுகையில், ‘நடிகைகள் இனிமேல் தங்களது வருமானத்துக்காக திரைப்பட தயாரிப்பாளர்களையோ அல்லது ஓடிடி தளங்களையோ மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேகா சர்மா போன்றவர்கள் தங்களின் தனிப்பட்ட செல்வாக்கை சிறப்பாக பயன்படுத்தி, சுயவருமானத்தை உருவாக்கி வெற்றிபெற்று வருகின்றனர்’ என்றனர்.

Tags : Neha Sharma ,Mumbai ,Bollywood ,
× RELATED ஷங்கர்-எஹ்சான்-லாய் கூட்டணியுடன்...