
மலையாளத்தில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் படம், ‘பள்ளிச்சட்டம்பி’. கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. கன்னடத்தில் ‘முகில்பேட்’ என்ற படத்தில் அறிமுகமான அவர், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதில் அவரது நடிப்பை பலர் பாராட்டினர். கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ என்ற தமிழ் படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ‘பள்ளிச்சட்டம்பி’ படம், கயாடு லோஹரின் 3வது மலையாள படமாகும்.
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐஆம் கேம்’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படம், வரும் ஏப்ரல் மாதம் 9 தேதி ரிலீசாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் சார்பில் நவ்ஃபல், பிரிஜீஷ், சி கியூப் ப்ரோஸ் சார்பில் சாணக்யா, சைதன்யா, சரண் தயாரிக்கின்றனர். இப்படம் முழுநீள மாஸ் ஆக்ஷனுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். மேகா ஷியாம், தன்சீர் இணை தயாரிப்பு செய்கின்றனர். எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியுள்ளார்.
கடந்த 1950-60களில் கேரளாவில் நடப்பது போன்ற ஒரு உண்மைச் சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன் நடித்துள்ளனர். இதனால் கவர்ச்சியற்ற கயாடு லோஹரை இதில் பார்க்கலாம் என்கிறது படக்குழு.

