×

81 வயதில் இயக்குனரான பத்திரிகையாளர்

தனது 81 வயதில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து, ஒளிப்பதிவு செய்து, ‘கல்லூரி கலக்கல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார், பத்திரிகையாளர் பொன் உத்ரா. இதில் ஹீரோவாக எம்.ஜி.முருகன், ஹீரோயினாக பூர்விகா நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் அபிஷேக், சல்மிதா, மாயா மயூரி, பகவதி பாலா, யோகி மணி, எம்.ஜி.ஆர்.மணி, வெல்டிங் குமார், ஆனந்தி, யோகேஸ்வரி, தேவதர்ஷினி, மகாலட்சுமி, கணேஷ், கார்த்தி நடித்துள்ளனர். காதலில் தோல்வி அடைந்த மாணவி, தனது கல்லூரி காதலனை பழிவாங்கும் கதையுடன் படம் உருவாகியுள்ளது.

சென்னை ஊரப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், வளசரவாக்கம், அய்யஞ்சேரி, அருங்கால், காரணை புதுச்சேரி ஆகிய பகுதிகளிள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மூன்று சண்டைக் காட்சிகள் இடம்பெறுகிறது வரும் தமிழ்ப் புத்தாண்டில் படம் வெளியாகிறது. சீனியர் பத்திரிகையாளர் உத்திராபதி, பொன் உத்ரா என்ற பெயரில் இப்படத்தை உருவாக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Tags : Pon Uthra ,M.G. Murugan ,Poorvika ,Abhishek ,Salmita ,Maya Mayuri ,Bhagavathy Bala ,Yogi Mani ,M.G.R. Mani ,Welding Kumar ,Anandhi ,Yogeshwari ,Devadarshini ,Mahalakshmi ,Ganesh ,Karthi ,
× RELATED போதை பொருள் வழக்கில் சிக்கி தலைமறைவு...