சென்னை: கடந்த 2018ல் தனது நீண்ட நாள் காதலர் ஆண்ட்ரே கோச்சீவ்வை காதல் திருமணம் செய்தவர், ஸ்ரேயா சரண். இத்தம்பதிக்கு ராதா சரண் கோச்சீவ் என்ற பெண் குழந்தை இருக்கிறது. தமிழில் கடைசியாக சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்த ஸ்ரேயா சரண், பிறகு ‘மிராய்’ என்ற படத்தில் ஹீரோ தேஜா சஜ்ஜாவின் தாயாக நடித்துஇருந்தார். தற்போது இந்தியில் அஜய் தேவ்கனுடன ‘திரிஷ்யம் 3’ என்ற ரீமேக் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் புத்தாண்டையொட்டி ஆண்ட்ரே கோச்சீவ், ராதா சரண் கோச்சீவ் ஆகியோருடன் ராஜஸ்தானிலுள்ள மஹாரோ கெத் ரிசார்ட்டில் விடுமுறை நாட்களை கொண்டாடிய ஸ்ரேயா சரண், அங்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும், அங்கிருந்த குயவர்களிடம் மண் பானை செய்வது எப்படி என்பதையும் கேட்டு தெரிந்துகொண்டார்.
