×

மூன்றாம் நபர்கள், அனுபவிப்பவர்கள் உள்பட கோயில் சொத்துக்களை கிரையம் செய்தவர்களை வெளியேற்ற வேண்டும்

* கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு
சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட உத்தரவுகளிலும், ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் சட்ட விரோதமாக கோயில் நிலத்தை அனுபவித்து வருபவர்களை எவ்வித பாரபட்சமும் காட்டாமல் வெளியேற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவு வழங்கியுள்ளது. அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களின் ஆக்கிரமிப்பினை அகற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் சமயம் ஒத்துழைப்பு கோரி வருவாய் மற்றும் காவல்துறையிடம் கோயில் நிர்வாகிகள், செயல் அலுவலர்கள் கோரும் போது, ஆக்கிரமிப்பு அகற்றி சுவாதீனம் எடுக்கும் பணியில் வருவாய் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க ஆணையர் நேர்முக கடிதம் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை கண்டறியவும், பரிசீலனை செய்யவும் கோயில் வாரியாக அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்கள் மற்றும் சட்ட விரோதமாக நிலக்கிரையம் செய்யப்பட்டிருக்கும் இனங்களில் காலதாமதமில்லாமல் உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்ய செயல் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது சிறிதும் காலதாமதமின்றி இந்து சமயம் மற்றும் அறநிலையக் கொடைகள் சட்ட பிரிவு 79பி கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இச்சுற்றறிக்கையை பின்பற்றாத சார்நிலை அலுவலர்கள் மீது உயர்நீதிமன்றத்தால் உத்தரவிட்டபடி கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

The post மூன்றாம் நபர்கள், அனுபவிப்பவர்கள் உள்பட கோயில் சொத்துக்களை கிரையம் செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : KUMARUBARUBARAN ,Chennai ,Kumarubaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்