
கடந்த 2005ல் தெலுங்கில் வெளியான ‘மொடாட்டி சினிமா’ என்ற படத்தில் அறிமுகமானவர், பூனம் பஜ்வா. பிறகு கன்னடத்திலும், மலையாளத்திலும் நடித்த அவர், 2008ல் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தெனாவட்டு’, ‘தம்பிக்கோட்டை’, ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘குப்பத்து ராஜா’ உள்பட சில தமிழ் படங்களில் நடித்தார். புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையிலும் கூட, தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கும் அவர், தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது வழக்கம்.
அவரது இன்ஸ்டாகிராமில் 27 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பூனம் பஜ்வா, தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளார். தனது யூடியூப்பில் அவர் வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. புதிய வீட்டில் குடியேறியுள்ள அவர், அதன் அம்சங்களை விவரித்து வீடியோ வெளியிட்டார். அதில், ‘இந்த புதிய வீடு எனக்கு மிகவும் அர்த்தம் நிறைந்தது. ஒரு புதிய தொடக்கம், புதிய நினைவுகள் மற்றும் நான் அன்புடன் கட்டிய இடம். இந்த வீடு உணர்வுப்பூர்வமானது, மிகவும் சிறப்பு வாய்ந்தது, எனது வாழ்க்கையில் மிகப்பெரிய அம்சம் நிறைந்தது’ என்று தெரிவித்தார்.
தற்போது ஷார்ட் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை மயக்கி வைரலாகி வருகிறது.

