×

என் படத்தையும் பாருங்கள்: சன்னி லியோன் வேண்டுகோள்

சென்னை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கும் தமிழ்ப் படம், ‘ஓ மை கோஸ்ட்’. முக்கிய கேரக்டர்களில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, ரமேஷ் திலக், அர்ஜூனன் நடித்துள்ளனர். தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்ய, ஜாவித் ரியாஸ் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்ற படத்தை இயக்கிய டான்ஸ் மாஸ்டர் ஆர்.யுவன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் பங்கேற்ற சன்னி லியோன் பேசியதாவது: மீண்டும் நான் தமிழில் நடிக்க வந்தது குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்தப் படத்துக்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வழங்கியுள்ளோம். இதில் நான் வீரம் மிகுந்த ராணி கேரக்டரில் நடித்துள்ளேன். இப்படத்தைப் பார்க்க உங்களது நேரத்தையும், பணத்தையும் கண்டிப்பாக நீங்கள் ஒதுக்க வேண்டும். அதற்காக முன்கூட்டியே உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கனவை நீங்கள் திரையில் பார்க்கப் போகிறீர்கள். உங்கள் அன்பும், ஆதரவும் எங்களுக்கு கட்டாயம் தேவை. நல்ல கதைகள் அமைந்தால், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.

Tags : Sunny Leone ,
× RELATED மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்