×

பின்னணி இசை இல்லாத டிராக்டர்

சென்னை: பின்னணி இசையே இல்லாத தமிழ் திரைப்படமான ‘டிராக்டர்’ 14வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘டிராக்டர்’ திரைப்படத்தில் வழக்கமான பின்னணி இசை சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக நடிகர்களின் வசனத்தை தளத்திலே பதிவு செய்தும் மற்றும் இயற்கையான சுற்றுப்புற ஒலியை பதிவு செய்து (Sync Sound) பயன்படுத்தி இருப்பது, வாழ்வியலின் நம்பகத்தன்மையை ஏற்படுத்த உதவியுள்ளது என்கிறது படக்குழு.

‘டிராக்டர்’ என்ற திரைப்படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் அர்த்தமுள்ள விவாதங்களை எழுப்பவும் மற்றும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் ஜெயந்தன். இவர் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே “குடியம் குகைகள்” மற்றும் “இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை” ஆகிய ஆவணப்படங்களை இயக்கியவர்.

The post பின்னணி இசை இல்லாத டிராக்டர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,14th Dada Saheb Phalke Film Festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா வெளியிட்ட நிர்வாண போட்டோ: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி