×

மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன்

 

சென்னை: ப்ளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி.சாம் தயாரிக்கும் படம், ‘பேட்ட ராப்’. இதில் பிரபுதேவா, வேதிகா, ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் நடிக்கின்றனர். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைக்கிறார். எஸ்.ஜே.சீனு இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவாவுடன் இணைந்து சன்னி லியோன் நடனம் ஆடியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘நான் பிரபுதேவாவின் தீவிர ரசிகை. அதிவேக நடனத்துக்கு பிரபலமான அவருடன் சேர்ந்து எப்போது நடனமாடுவேன் என்று காத்திருந்தேன். இப்போது ‘பேட்ட ராப்’ படத்துக்காக அவருடன் சேர்ந்து ஆடும்போது பதற்றம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அவர், நடனத்தில் கவனம் செலுத்தி ஆடும்படி அட்வைஸ் செய்தார். பிறகு மனதை திடப்படுத்திக்கொண்டு ஆடினேன்’ என்றார். இதற்கு முன்பு இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள சன்னி லியோன், தமிழில் ‘வடகறி’, ‘ஓ மை கோஸ்ட்’, ‘தீ-இவன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘பேட்ட ராப்’ படத்தின் மூலம் மீண்டும்
தமிழுக்கு வந்துள்ளார்.

The post மீண்டும் தமிழுக்கு வந்த சன்னி லியோன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Joby B. Sam ,Blue Hill Films ,Prabhu Deva ,Vedika ,Rias Khan ,Maim Gopi ,Bhagwati Perumal ,Ramesh Tilak ,Jeethu Damodar ,Iman ,Leone ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்