×

சிவகார்த்திகேயன் சென்ற கார் திடீர் விபத்து

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் சென்னை மத்திய கைலாஷ் அருகே விபத்தில் சிக்கியது. வாகன நெரிசல் காரணமாக முன்னால் சென்ற காரின் பின் பகுதியில் சிவகார்த்திகேயன் கார் மோதியுள்ளது. முன்னால் சென்ற கார் ஓட்டுநர் சிவகார்த்திகேயன் காரில் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவகார்த்திகேயன் உள்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து தொடர்பாக விசாரணை செய்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : Sivakarthikeyan ,Chennai ,Central Kailash, Chennai ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்