- பிரபாஸ்
- நிதி அகர்வால்
- ஹைதெராபாத்
- மாருதி
- சஞ்சய் தத்
- மாலவிகா மோகனன்
- ரித்தி குமார்
- பொமன் இரானி
- தமன்
- இந்தியா
ஐதராபாத்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், போமன் இரானி நடித்துள்ள பான் இந்தியா படம், ‘தி ராஜா சாப்’. வரும் 9ம் தேதி தெலுங்கில் திரைக்கு வரும் இப்படம், 10ம் தேதி தமிழில் வெளியாகிறது. தமன் இசை அமைத்துள்ளார். இதில் நடித்தது குறித்து நிதி அகர்வால் கூறுகையில், ‘இந்தியாவின் முன்னணி நடிகரான பிரபாஸுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது.
அதை நிறைவேற்றி வைத்தவர் பிரபாஸ். அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ரசிகர்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸர் அடிப்பதும், ஸ்டேடியத்தில் சிக்ஸர் அடிப்பதும் இரண்டும் ஒன்று இல்லை.
அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சப்தகிரி, விடிவி கணேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எனது சக நடிகைகளான மாளவிகா மோகனன், ரித்தி குமாருடன் இணைந்து பணியாற்றிய இனிமையான அனுபவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது’ என்றார்.

