- விக்ரம் பிரபு
- ரகு
- சென்னை
- சுரேஷ் ராஜகுமாரி
- அனிஷ்மா அனில் குமார்
- இஸ்மத் பானு
- பாலு மகேந்திரா சினிமா பட்டரை
- பாண்டிச்சேரி ஆதிசக்தி திரையரங்குகள்
- விவேக்
- விஜய் சேதுபதி
சென்னை: சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘சிறை’ படத்தில், ஹீரோயின் அனிஷ்மா அனில் குமாரின் அக்கா இஸ்மத் பானுவின் கணவராக நடித்து பாராட்டு பெற்றவர், ரகு. முன்னதாக பாலு மகேந்திரா சினிமா பட்டறை, பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டர்ஸ் ஆகியவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ள அவர், விவேக் நடித்த ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் அறிமுகமானார்.
பிறகு விஜய் சேதுபதியின் தம்பியாக ‘தர்மதுரை’ மற்றும் ‘பூஜை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘டிஎஸ்பி’, ‘சூது கவ்வும் 2’ ஆகிய படங்களில் நடித்தார். அவர் கூறியதாவது: ‘சிறை’ படத்தை பார்த்துவிட்டு நடிகர்கள் சூரி, அருள்தாஸ், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார், இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, தமிழ், ஜி.என்.ஆர்.குமரவேலன் உள்பட பலர் எனது நடிப்பை பாராட்டினர். ‘லிங்கம்’, ‘மெட்ராஸ் மிஸ்ட்ரி’ உள்பட மூன்று வெப்தொடர்களில் நடித்துள்ளேன்.
நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘குட் நைட்’ மணிகண்டன் நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். எனது சகோதரர் தயாரித்த ‘நெருப்புடா’ படத்தில் நடித்திருந்த விக்ரம் பிரபு, ‘சிறை’ படத்தை பார்த்துவிட்டு, ‘வெளியே எல்லாம் சென்றுவிடாதீர்கள். அடி விழ போகிறது’ என்று ஜாலியாக கமென்ட் அடித்தார். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களில் நடிப்பேன்.

