×

நெஞ்சுக்கு நீதி மே 20ம் தேதி வெளியாகிறது

இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆர்டிகல் 15 படம் தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரா, ஆரி அருஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். அருண்ராஜா காமராஜ்  இயக்கி உள்ளார், போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன்  தாமஸ் இசை அமைத்துள்ளார். இதில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் மே 20 அன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Tags :
× RELATED ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட ரோபோடிக்...