×

வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4ம் தேதி ரிலீஸ்.!

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கி உள்ளார்.  டிம்பிள் ஹயாத்தி ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு, பாபு ராஜ் ரவீனா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 26 ம் தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊடரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் அறிவிக்கப்பட்டபடி வெளியாகவில்லை. தற்போது ஊரடங்கு விலக்கி கொள்ளப் பட்டிருப்பதால் வரும் பிப்ரவரி 4ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Vagai ,
× RELATED மக்கள் பணத்தில் ஒரு நாளைக்கு ₹1.50 கோடி ஆடை: ‘மோடி என்னை விட சிறந்த நடிகர்’