×

திருமணம் ஆனவர்களை புறக்கணிக்கும் நிலை மாற வேண்டும்

ஐதராபாத்: தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் திரைப்படங்கள், வெப்ெதாடர்கள், விளம்பரங்களில் பிசியாக நடிப்பவர், காஜல் அகர்வால். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும், தனது நீண்ட நாள் காதலருமான கவுதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து, நீல் என்ற மகனுக்கு தாயான அவர், மும்பையில் தனது குடும்பத்தினருடன் தனி வீட்டில் வசித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ள அவர், தெலுங்கில் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘சத்யபாமா’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற காஜல் அகர்வால் கூறியதாவது:

ஒரு பெண் மனைவியாகவும், தாயாகவும் இருந்தாலும் கூட, அது அவர் செய்து வரும் தொழிலை பாதிக்கக்கூடாது. அவர் திருமணமானவர், அதனால் இப்படத்துக்கு வேறொருவரை தேர்வு செய்யலாம் என்ற குரல்களை நான் கேட்டிருக்கிறேன். அதை நான் கடந்தும் வந்துள்ளேன். ஆனால், அதுபோன்ற குரல்கள் தற்போது குறைந்துவிட்டதாக நினைக்கிறேன். மனைவி, தாய் என்ற பொறுப்புகளை நான் ஏற்றிருந்தாலும், அது எனது அர்ப்பணிப்பு உணர்வையும், எனர்ஜியையும், தொழிலையும் எந்த நிலையிலும் பாதிக்கவில்லை. திருமணமானவர், ஒரு குழந்தையை வைத்திருப்பவர், அவரால் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற முடியாது என்று சொல்லி, எனக்கு வரவேண்டிய சில கேரக்டர்கள் மற்றவர்களுக்கு மாறியிருக்கிறது. ஆனால், தற்போது இந்த நிலை மாறி வருகிறது என்பதை அறிகிறேன்.

அத்தகைய பெண்கள் திரையுலகில் தங்களது திறமைகளை நிரூபித்து இருக்கின்றனர். திருமணமானவுடன் ஹீரோயின்களின் திரையுலக வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. நான் சினிமாவில் நீடித்து நிலைப்பதற்கு என் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் மிக முக்கியமானது. அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் தலையிடாமல் என்னை ஊக்கப்படுத்துவதால், திரையுலகில் எனக்கான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அவர் களுக்கு நன்றி.

The post திருமணம் ஆனவர்களை புறக்கணிக்கும் நிலை மாற வேண்டும் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Kajal Aggarwal ,Gautham Kitchlu ,Mumbai ,Neil ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பர்தா அணிந்தபடி நகை கடைக்குள்...