×

பகலறியான் 5 முறை மாற்றப்பட்ட பின்னணி இசை

சென்னை: ரிஷிகேஷ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகன் தயாரிப்பில், முருகன் இயக்கத்தில் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம், ‘பகலறியான்’. இதற்கு இசை அமைத்துள்ள விவேக் சரோ கூறுகையில், ‘இது என் முதல் படம். இதற்கு முன்பு நான் டி.வி விளம்பர நிகழ்ச்சிகளுக்கு இசை அமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. என்னால் மிகச்சிறப்பாக இசை அமைக்க முடியும் என்று நம்பி, மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி.

இந்தப் படத்துக்காக உண்மையிலேயே 5 முறை மாற்றி, மாற்றி பின்னணி இசை அமைத்துள்ளேன். படம் பார்த்த அனைவரும் பாராட்டினர். இதில், இதுவரையிலும் பார்க்காத வெற்றியைப் பார்க்க முடியும்’ என்றார். விஷ்ணுப்பிரியா, அக்‌ஷயா கந்தமுதன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

The post பகலறியான் 5 முறை மாற்றப்பட்ட பின்னணி இசை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Latha Murugan ,Rishikesh Entertainments ,Murugan ,Vetri ,Vivek Saro ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்