×

தனுஷின் பனாரஸ் லவ்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கிரித்தி சனோன் ஜோடி சேர்ந்துள்ள ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் இன்று தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வந்துள்ளது. முன்னதாக படக்குழுவினருடன் வாரணாசிக்கு சென்றிருந்த தனுஷ், அங்கு எடுத்த சில போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவரது (சிவன்) காலடியில் இருக்கும்போது, இந்த உலகம் சிறந்த இடமாக இருக்கிறது.

ஹரஹர மகாதேவ். பனாரஸ் லவ்’ என்று கூறியுள்ளார். படம் திரைக்கு வருவதையொட்டி, புனித நகரமான வாரணாசியில் ஆசிபெறும் அவரது மனநிலையை பக்திப்பூர்வமான அந்த வரிகள் பிரதிபலிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

Tags : Dhanush ,Anand L. Rai ,Kriti Sanon ,Varanasi ,Shiva ,
× RELATED மலையாள நடிகர் சங்கத்தில் திலீப் சேர்க்கப்படுவாரா..? ஸ்வேதா மேனன் பதில்