×

நடிகர் அஜித்தின் வலிமை படம் குறித்து மனம் திறந்த அப்படத்தின் இயக்குனர் எச். வினோத்

வலிமை படம் நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளிவந்த First லுக் முதல் விசில் தீம் வரை அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அஜித்தின் அணைத்து வெறித்தனமான ரசிகர்களும் காத்துகொண்டு இருப்பது, வலிமையின் டிரைலருக்காக தான். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் எச். வினோத். அதில் ஒன்றாக வலிமை படம் உருவான விதம் குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது " நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்துடன் இன்னோரு படம் இயக்க முடிவானது. மாஸ் ஹீரோ என்றால் அப்படத்தில் அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும் ". மேலும் " இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் நாம் கவனிக்க தவறிய விஷயங்களும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளின், பின்னணியில் வைத்து ஆக்ஷன் கலந்து வலிமை படம் உருவாகியுள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

Tags : H.S. Vinod ,
× RELATED இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்