×

ஹிருது ஹாரூன் நடிக்கும் டெக்ஸாஸ் டைகர்

சென்னை: யுகே ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்கும் மியூசிக்கல் எண்டர்டெயினர் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. சென்னையின் வண்ணமயமான பின்னணியில், மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்படுகிறது. ‘ஃபேமிலி படம்’ என்ற படத்தின் இயக்குனர் செல்வகுமார் திருமாறன் எழுதி இயக்குகிறார். ஹிருது ஹாரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர்.கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன், சம்யுக்தா ஷான் நடிக்கின்றனர். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வகுமார் திருமாறன், சுஜித் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் திரு அசோசியேட் விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, ஓஷோ வெங்கட் இசை அமைக்கிறார். பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்ய, கே.பி.நந்து அரங்கம் அமைக்கிறார். சுகன் சண்ைடப்பயிற்சி அளிக்கிறார். கெளுத்தி, ஆதவன் தமிழ், ரிதுன் சாகர், ஆ.பா.ராஜா பாடல்கள் எழுதுகின்றனர்.

Tags : Texas ,Hridu Haroon ,Chennai ,UK Squad Company ,Selwakumar Thirumaran ,Samyukta Viswanathan ,Rokini ,Sachana ,Wafa Kadija ,Peter ,Kay ,Parthiban Kumar ,Antani Dasan ,Samyukta Shaan ,Balaji Kumar ,Sujit ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…