×

ப்ரொபோஸ் செய்தவரை கன்னத்தில் அறைந்த ஸ்ருதிஹாசன்

சென்னை: தனக்கு வந்த காதல் ப்ரொபோஸ் பற்றியும் அப்போது தான் செய்த செயலையும் பற்றி பேசியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ‘‘பள்ளியில் படித்தபோது யாருமே என் பக்கம் கூட திரும்பிப் பார்க்கவில்லை. நான் விசித்திரமானவள் என்று நினைத்தார்கள். ஸ்ருதிக்கு யாருமே ப்ரொபோஸ் பண்ணலயேனு என் பெஸ்ட் பிரெண்ட் ஃபீல் பண்ணி என்னை பார்த்து என் வேலன்டைனா இருக்கியானு கேட்டான். எனக்கு சிம்பதி லவ் வேண்டாம் என்றேன். அவன் பாவம் பார்த்து ஒரு நாள் ப்ரொபோஸ் செய்ததும் எனக்கு கோபம் வந்து பளார்னு அறைந்துவிட்டேன். பாவம் பார்த்து சொன்னதால் எனக்கு ஹர்ட் ஆகிவிட்டது’’. தன்னை திருமணம் செய்து கொள்ளும் ஆள் எப்படி இருக்க வேண்டும் என தொடர்ந்து ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, ‘‘என் புருஷனுக்கு கண்டிப்பாக தாடி இருக்கணும். ரொம்ப நல்ல மனுஷனாக இருக்கணும். அன்பாக இருக்கணும். இன்டெலிஜன்ட்டாக இருக்க வேண்டும். நேர்மையாக இருக்கணும். தப்பு செய்தால் நான் தப்பு செய்துவிட்டேன் என்று என்னிடம் சொல்லிடணும்’’ என்றார்.

Tags : Shruti Haasan ,Chennai ,Shruti ,
× RELATED தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற நடிகை” ரூ.25 ஆயிரம் அபராதம்